Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, 10 February 2011

நவசக்தி அருள் பெற

 
பார்வதி தேவியை 9 வகையான சக்தி கொண்ட மகாசக்தியாக சொல்வார்கள்.அவை நவசக்தி ஆகும்.
அவை என்னென என்பதில் 2 விதமான கருத்துக்கள் உண்டு.
சர்வபூதமணி,மனோன்மணி,பலப்ப்ரதமணி,பலவிகரிணி,கலவிகரணி,காலி,ரவுத்ரி,கேட்டை,வாமை என்ற 
9 சக்திகளே நவசக்தி என்பது ஒரு கருத்து.
தீபத்தை,சூட்சுமை,ருசி,பத்ரை,விபூதை,விமலை,அமோகை,விதுதை,சர்வதொக்யை என்பது மற்றொரு 
கருத்து.
இவற்றை 9 அர்ச்சகர்கள் பூஜை செய்வார்கள்.9 வகை மலர்களால் அர்ச்சனை செய்வார்கள்.9 வித நைவேத்யங்கள் படைப்பார்கள்.
மாயவரம் அருகில் உள்ளது தருமபுரம் ஆதினம்.இதன் நிர்வாகத்தில் 27 ஆலயங்கள் உள்ளன.இங்கு உள்ள அம்பாளுக்கு தை வெள்ளிக்கிழமைகளில் நவசக்தி அர்ச்சனை நடக்கிறது.இதில் நாமும் பங்கு பெற்று நவசக்தியின் அருள் பெறலாம்.

No comments:

Post a Comment